Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்

Aḷḷik Koḍuppathil Vallamai Petrravan

Add to favourites
Share
Show QR code
Download PDF
Meaning
Transliteration
Notes & Sources

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்

அப்பன் பழனியப்பன் – தினம்

அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்

அப்பன் பழனியப்பன்


கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்

காவலில் நின்றிருப்பான் – அங்கு

கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்

கண்டு களித்திருப்பான்.


துள்ளிவரும் வடிவேலுக்கு மேல் ஒரு

ஜோதிப் பிழம்பும் உண்டோ? – அந்த

சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தைச்

சொல்ல மொழியும் உண்டோ!


வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்

வேறொரு சொர்க்கம் உண்டோ? – ஆண்டி

வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்

வேலனை வெல்வது உண்டோ!


சித்தர் வணங்கிய சேவற்கொடியோனைச்

சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த

சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்

சென்று கனிந்து நிற்போம்!


பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்

பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு

பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்

செய்து பணிந்திடுவோம்!


செட்டி முருகன் எனும் பெயர் பெற்றவன்

தண்டாயுதம் அல்லவோ – அந்த

சித்திர வள்ளியும் ஜாடையில் மற்றொரு

செட்டி மகள் அல்லவோ!


கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட

கோஷமிட்டே ஓடிடுவோம் – முள்ளும்

குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி

கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!


ஆறும் அறுபதும் ஆன இருபதும்

ஆடி நடந்து செல்வோம் – சில

ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்

அன்புடன் ஊர்ந்து செல்வோம்!


ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை

உச்சத்தில் வைத்திருப்போம் – கையில்

உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து

மிச்சத்தில் வாழ்ந்திருப்போம்!


வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்

வேட்டுவன் கந்தனுக்கு – இரு

கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்

கனிவு நிறைந்திருக்கு!


காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று

கால்களிலே விழுவோம் – அவன்

கால்களிலே விழக் கால்கள் நடக்கட்டும்

காவிரிபோல் வளர்வோம்!

Aḷḷik koḍuppathil vallamai peṟṟavan

Appan Pazhaniyappan – dinam

Achcham thavirppavan aaṟuthal solbavan

Appan Pazhaniyappan


Kaḷḷam kabaḍam illaathavar thammidam

Kaavalil ninṟiruppaan – angu

Kaalnaḍaiyaai varum maanida jaathiyaik

Kaṇḍu kaḷiththiruppaan.


Thuḷḷivarum Vadivelukku mael oru

Jothip pizhampum uṇḍoa? – antha

Suppaiyan poaloru aṟputha deivaththaich

Solla mozhiyum uṇḍoa!


Veḷḷimugam panireṇḍaiyum kaṇḍapin

Vaeṟoru sorggam uṇḍoa? – aaṇḍi

Vaeshaththilaayinum veeraththilaayinum

Velanai velvathu uṇḍoa!


Siththar vaṇangiya saevar koḍiyoanaich

Saernthu vaṇangiḍuvoam – antha

Sikkalilaayinum Senthililaayinum

Senṟu kaninthu niṟpoam!


Bhaktharukkenṟu thiṟanthirukkum then

Pazhaniyaik kaṇḍukoḷvoam – angu

Paalaabhishaegamum thaenaabhishaegamum

Seithu paṇinthiḍuvoam!


Seṭṭi Murugan enum peyar peṟṟavan

Thaṇḍaayutham allavoa – antha

Siththira Vaḷḷiyum jaaḍaiyil maṟṟoru

Seṭṭi magaḷ allavoa!


Koṭṭik koḍuppavan koavilaip paarththiḍa

Koashamiṭṭae oaḍiḍuvoam – muḷḷum

Kuththaṭṭumae kallum thaṭṭaṭṭumae vali

Konjamum kaṇḍukoḷḷoam!


Aaṟum aṟubathum aana irubathum

Aaḍi naḍanthu selvoam – sila

Aananthap paaḍalgaḷ Velanaip paaḍaṭṭum

Anbuḍan oornthu selvoam!


Ooṟugaḷ naeraṭṭum Umaiyavaḷ mainthanai

Uchchaththil vaiththiruppoam – kaiyil

Uḷḷathai annavan koavilukkae thanthu

Michchaththil vaazhnthiruppoam!


Velan Kumaran Murugan Thiruchchenthil

Vaeṭṭuvan Kanthanukku – iru

Kaalgaḷ naḍakkinṟa naḍaiyinil thaanuyar

Kanivu niṟainthirukku!


Kaalam vazhiviḍum kachchithamaai senṟu

Kaalgaḷilae vizhuvoam – avan

Kaalgaḷilae vizhak kaalgaḷ naḍakkaṭṭum

Kaaviripoal vaḷarvoam!

அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும், அச்சத்தை நீக்கி ஆறுதல் தருபவனாகவும் பழனி முருகன் போற்றப்படுகிறார். கள்ளம் கபடமற்ற மனதுடன் தன்னை நாடி வரும் பக்தர்களைக் காத்து, கால்நடையாகத் தன்னைத் தேடி வருபவர்களைக் கண்டு மகிழும் கருணைமிக்க இறைவனாக முருகன் சித்தரிக்கப்படுகிறார்.


ஒளிவீசும் வேலையும், ஆறுமுகனின் பன்னிரு கண்களும், ஆண்டிக் கோலமும், வீரத் தோற்றமும் முருகனின் தெய்வீக அழகையும் ஆற்றலையும் எடுத்துரைக்கின்றன. சித்தர்கள் வணங்கிய சேவற்கொடியோனை சிக்கலிலும் செந்திலிலும் பழனியிலும் சென்று வணங்கி, பாலும் தேனும் கொண்டு அபிஷேகம் செய்து பணிவோம் எனப் பாடல் அழைக்கிறது.


பாதையில் முள்ளும் கல்லும் துன்பமும் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் முருகனை நோக்கிச் செல்ல வேண்டும். கையில் இருப்பதையும் அவனுக்கே அர்ப்பணித்து, உமையவளின் மைந்தனை வாழ்வின் உயர்ந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற ஆழமான சரணாகதி உணர்வை பாடல் எடுத்துரைக்கிறது.


இறுதியில், முருகனின் திருவடிகளை அடைவதற்காகவே நம் கால்கள் நடக்கட்டும் என்றும், அவன் அருளால் நம் வாழ்க்கை காவிரியைப் போல வளம்பெற்று வளரட்டும் என்றும் வேண்டுவதுடன் பாடல் நிறைவடைகிறது.

The song praises Palani Murugan as a generous Lord who gives abundantly, removes fear, consoles his devotees, and protects those who approach him with a sincere and guileless heart. He joyfully watches devotees who undertake arduous pilgrimages on foot to reach him.


Murugan's radiant Vel, his divine faces and eyes, his ascetic appearance and heroic form are celebrated. The song invites devotees to worship the Lord of the rooster flag at sacred Murugan shrines such as Sikkal, Senthil and Palani, offering milk and honey abhishekam with devotion.


The devotee is encouraged to continue towards Murugan despite thorns, stones, pain and other obstacles. Everything one possesses is ultimately offered to the Lord, expressing complete surrender and placing the son of Uma above all else in life.


The concluding prayer is especially beautiful: may our feet continue to walk until they fall at Murugan's sacred feet, and through his grace may our lives flourish abundantly like the river Kaveri.

Notes & Sources

இந்தப் பாடல் பழனியப்பனாகிய முருகனின் அருள், கொடை, காவல் மற்றும் பக்தர்களிடம் கொண்ட கருணை ஆகியவற்றைப் போற்றுகிறது. “அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்” என்ற முதல் வரியே பாடலின் மையக் கருத்தை அழகாகச் சொல்கிறது. பக்தனின் அச்சத்தைப் போக்கி, ஆறுதல் அளித்து, கள்ளம் கபடமற்ற உள்ளத்துடன் வருபவர்களைக் காக்கும் தெய்வமாக முருகன் சித்தரிக்கப்படுகிறார்.



பழனி மட்டுமன்றி சிக்கல், செந்தில், சேவற்கொடி, வேல், வள்ளி, தண்டாயுதம் போன்ற முருக வழிபாட்டின் பல கூறுகளையும் பாடல் இணைக்கிறது. குறிப்பாக நடைப்பயணம், அபிஷேகம், கோஷமிட்டு முருகனை நாடுதல், தன்னிடம் இருப்பதை இறைவனுக்குச் சமர்ப்பித்தல் போன்றவை பக்தியின் வெளிப்பாடுகளாக வருகின்றன. இதனால் இது வெறும் துதிப்பாடலாக இல்லாமல், முருக பக்தனின் யாத்திரை உணர்வையும் சரணாகதியையும் வெளிப்படுத்தும் பாடலாக அமைகிறது.