Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை

Odi Odi Odi Utkalantha Jothiyai

Sivavaakkiyaar இயற்றியவர் · Author Sivavaakkiyaar
Add to favourites
Share
Show QR code
Download PDF
Meaning
Transliteration
Notes & Sources
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம் நமசிவாய.....) என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்துகொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யானுணர்ந்து கொண்டேனே (ஓம் நமசிவாய.....) நானதேது நீயதேது நடுவிலே நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம் நமசிவாய.....) அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓரெழுத்தை அறிந்துகூற வல்லிரேல் அஞ்சலஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே (ஓம் நமசிவாய.....) இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குச் சக்கரம் வலக்கை சூலமான்மழு எடுத்தபாதம் நீண்முடி எண்டிசைக்கும் அப்புறம் உடல்கலந்துநின்ற மாயம் யாவர்காண வல்லரோ அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே (ஓம் நமசிவாய.....) உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல கந்தமல்ல மந்திரங்கள் அல்லவே பெரியதல்ல சிறியதல்ல பேசலானி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரோ (ஓம் நமசிவாய.....) மண்கலங்க விழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நங்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே (ஓம் நமசிவாய.....) ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும் ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே (ஓம் நமசிவாய.....) நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம் நமசிவாய.....) பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழ்ந்துவந்த தெத்தனை (ஓம் நமசிவாய.....) அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம் நமசிவாய.....) அவ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய் உவ்வென்னும் எழுத்தினால் உருவு தரித்து நின்றனை மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம் நமசிவாய.....) மூன்று மண்டலத்திலும் முட்டிநின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வேணுமில்லையே (ஓம் நமசிவாய.....) நமச்சிவாய அஞ்செழுத்தும் நல்குமே நிலைகளும் நமச்சிவாய பஞ்சக்ஷரம் புராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய் நாதனே (ஓம் நமசிவாய.....) இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டுமொன்று நின்றதை எல்லை கண்டு கொண்டபேர் இனிப்பிறப்பதில்லையே (ஓம் நமசிவாய.....) கார கார கார கார காவல் ஊழி காலவன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீர் ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம் நமசிவாய.....) விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணிலே அணிந்துள்ள கண்ணிலாத காட்சியான் பண்ணினால் பிறப்பறுத்த பயன்கள் வைத்தபின் அண்ணலோடு உம்முடனே அமர்ந்துவாழ வேண்டுமே (ஓம் நமசிவாய.....) அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம் நமசிவாய.....) உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் அதொன்றே சிவாயமே (ஓம் நமசிவாய.....) ஓம் நம சிவாயமே உணர்ந்தமெய் உணர்ந்தபின் ஓம் நம சிவாயமே உணர்ந்தமெய் தெளிந்தபின் ஓம் நம சிவாயமே உணர்ந்தமெய் உணர்ந்தபின் ஓம் நம சிவாயமே உலகம்வந்து நிற்குமே (ஓம் நமசிவாய.....) ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம் நமசிவாய.....)
Odi odi odi odi utkalantha jothiyai Naadi naadi naadi naadi naatkalum kazhinthupoi Vaadi vaadi vaadi vaadi maandupona maandhargal Kodi kodi kodi kodi ennirantha kodiye (Om Namashivaya) Ennile iruntha ondraiyaan arinthathillaiye Ennile iruntha ondraiyaan arinthukondapin Ennile iruntha ondraiyaavar kaanavallaro Ennile irunthirunthu yaanunarnthu kondene (Om Namashivaya) Naanathethu neeyathethu naduvile ninrathethadaa Konathethu guruvathedhu kooridum kulaamare Aanathethu azhivathethu appurathil appuram Eenathethu Rama Rama Ramavendra naamame (Om Namashivaya) Anjezhuthile piranthu anjezhuthile valarnthu Anjezhuthai othugindra panchabootha paavigaal Anjezhuthil orezhuthai arinthukoora vallirel Anjalanjal endrunaathan ambalathil aadume (Om Namashivaya) Idathu kangal chandiran valathu kangal sooriyan Idakkai sangu chakkaram valakkai soolamaanmazhu Eduthapaatham neenmudi endisaikkum appuram Udalkalanthunindra maayam yaavarkaanavallaro Anjal anjal endrunaathan ambalathil aadume (Om Namashivaya) Uruvumalla veliyumalla ondraimevi ninrathalla Maruvumalla gandhamalla manthirangal allave Periyathalla siriyathalla pesalaani thaanumalla Ariyathaagi ninranermai yaavarkaanavallaro (Om Namashivaya) Mankalanga vizhnthapothu vaithuvaithu adukkuvaar Venkalang kavizhnthapothu venumendru penuvaar Nangalang kavizhnthapothu naarumendru poduvaar Enkalanthu ninramaayam enna maayam Eesane (Om Namashivaya) Aana anjezhuthule andamum akandamum Aana anjezhuthule aathiyaana moovarum Aana anjezhuthule akaaramum makaaramum Aana anjezhuthule adangalaavalutrathe (Om Namashivaya) Ninaippathondru kandilen neeyalaathu verilai Ninaippumaai marappumaai ninramaayai maaigaiyai Anaithumaai akandamaai anaathimun anaathiyaai Enakkulnee unakkulnaan irukkumaaru engane (Om Namashivaya) Pandunaan paritherintha panmalargal ethanai Paazhile jebithuvitta manthirangal ethanai Mindaraai thirinthapothu iraithaneergal ethanai Meelavum sivaalayangal soozhnthuvantha thethanai (Om Namashivaya) Ambalathai ambukondu asangendraal asangumo Kambamatra paarkadal kalangendraal kalangumo Inbamatra yogiyai irulumvanthu anugumo Sempon ambalathule thelinthathe Sivayame (Om Namashivaya) Avvennum ezhuthinaal akandam ezhum aaginaai Uvvennum ezhuthinaal uruvu tharithu ninranai Mavvennum ezhuthinaal mayanginaargal vaiyagam Avvumuvvum mavvumaai amarnthathe Sivayame (Om Namashivaya) Moondru mandalathilum muttinindra thoonilum Naandra paambin vaayilum navindrezhuntha atcharam Eendrathaayum appanum eduthuraitha manthiram Thondrumor ezhuthule solla venumillaiye (Om Namashivaya) Namashivaya anjezhuthum nalgume nilaigalum Namashivaya panchaksharam puraanamaana maaigaiyai Namashivaya anjezhuthum nammule irukkave Namashivaya unmaiyai nankurai sei Naathane (Om Namashivaya) Illai illai illai endru iyambugindra ezhaigaal Illai endru ninrathondrai illai ennalaagumo Illai alla ondrumalla irandumondru ninrathai Ellai kandu kondaper inippirappathillaiye (Om Namashivaya) Kaara kaara kaara kaara kaaval oozhi kaalavan Pora pora pora pora poril nindra punniyan Maara maara maara maara marangal ezhum eithaseer Rama Rama Rama Rama ennum naamame (Om Namashivaya) Vinnilulla thevargal ariyonaatha meipporul Kannile aninthulla kannilaatha kaatchiyaan Panninaal pirapparutha payangal vaithapin Annalodu ummudane amarnthuvaazha vendume (Om Namashivaya) Akaaramaana thambalam anaathiyaana thambalam Ukaaramaana thambalam unmaiyaana thambalam Makaaramaana thambalam vadivamaana thambalam Sikaaramaana thambalam thelinthathe Sivayame (Om Namashivaya) Unmaiyaana manthiram oliyile irunthidum Thanmaiyaana manthiram samaintha roopamaagiye Venmaiyaana manthiram vilainthu neerathaanathe Unmaiyaana manthiram athondre Sivayame (Om Namashivaya) Om Nama Sivayame unarnthamei unarnthapin Om Nama Sivayame unarnthamei thelinthapin Om Nama Sivayame unarnthamei unarnthapin Om Nama Sivayame ulagamvanthu nirkkume (Om Namashivaya) Odi odi odi odi utkalantha jothiyai Naadi naadi naadi naadi naatkalum kazhinthupoi Vaadi vaadi vaadi vaadi maandupona maandhargal Kodi kodi kodi kodi ennirantha kodiye (Om Namashivaya)
தமிழ் பொருள் சிவவாக்கியரின் இப்பாடல்கள், இறைவனை வெளியில் தேடுவதைவிட நமக்குள் இருக்கும் இறைநிலையை உணர்வதே உண்மையான ஞானம் என்பதை எடுத்துரைக்கின்றன. “ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி” என்று தொடங்கும் பாடலில், மனிதன் வாழ்நாள் முழுவதும் தேடுகின்ற இறைஜோதி உண்மையில் அவனுக்குள்ளேயே கலந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். “என்னிலே இருந்த ஒன்றை” என்ற வரிகள் இந்தக் கருத்தை மேலும் தெளிவுபடுத்துகின்றன. தன்னுள் இருக்கும் பரம்பொருளை அறியாதவரை மனிதன் அதை வெளியில் தேடுகிறான்; ஒருமுறை அதை அகத்தில் உணர்ந்துவிட்டால், இறைவனும் உயிரும் வேறல்ல என்ற ஆழ்ந்த அனுபவம் பிறக்கிறது. இப்பாடல்களில் “நமசிவாய” என்னும் திருவைந்தெழுத்து மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அண்டம், பஞ்சபூதங்கள், உயிர், உடல், இறைநிலை அனைத்தையும் இணைக்கும் மந்திரமாக நமசிவாயத்தை சிவவாக்கியர் காண்கிறார். வெறும் மந்திர உச்சரிப்பைவிட அதன் உட்பொருளை உணர்ந்து வாழ்வதே உயர்ந்த நிலை என்பதையும் வலியுறுத்துகிறார். கோயில்கள், பூக்கள், அபிஷேகம், மந்திரங்கள் போன்ற வெளிப்புற வழிபாடுகளை அவர் முற்றிலும் மறுப்பதாக அல்லாமல், அக உணர்வு இல்லாத சடங்குகள் மட்டும் இறைஞானத்தை அளிக்காது என்ற சித்தர் பார்வையை முன்வைக்கிறார். உருவம், அருவம், பெரியது, சிறியது என்ற எல்லா வரையறைகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளை நேரடி அனுபவத்தால் மட்டுமே உணர முடியும் என்பதே இப்பாடல்களின் மையச் செய்தி. இறுதியில், “ஓம் நம சிவாயமே உணர்ந்த மெய்” என்று கூறுவதன் மூலம், சிவம் எங்கோ தொலைவில் இருக்கும் ஒன்றல்ல; நம்முள்ளும் உலகெங்கும் நிறைந்திருக்கும் மெய்ப்பொருள் என்பதை உணர்வதே ஆன்மிகப் பயணத்தின் நிறைவு என சிவவாக்கியர் உணர்த்துகிறார்.
These verses of Sivavakkiyar convey a central Siddhar teaching: the Divine that human beings search for outside is already present within themselves. The opening verse, “Odi Odi Utkalantha Jothiyai,” speaks of people spending their entire lives searching for the Divine Light without realizing that this very light is intimately present within them. The verses beginning with “Ennile iruntha ondrai” deepen this idea. Until one recognizes the Divine within, one continues searching externally. Once this inner presence is experienced, the distinction between the seeker and the Divine begins to disappear. A major theme throughout these verses is the sacred five-syllabled mantra “Namashivaya.” Sivavakkiyar connects the Panchakshara mantra with creation, the five elements, consciousness and the presence of Shiva. His emphasis is not merely on repeating the mantra, but on realizing the truth represented by those five sacred syllables. The verses also question dependence on external rituals alone. Temples, flowers, sacred offerings, pilgrimages and mantras have spiritual value, but Sivavakkiyar repeatedly points the seeker towards inner realization. Ritual without awareness cannot by itself reveal the ultimate truth. The Divine, according to these verses, cannot finally be confined to form or formlessness, large or small, temple or image. It is the subtle reality that pervades the individual and the entire universe. Thus, the repeated invocation of “Om Namashivaya” becomes more than a chant: it represents the realization that Shiva is the eternal consciousness present within oneself and throughout existence.

Notes & Sources

“Odi Odi Utkalantha Jothiyai” is a profound collection of verses attributed to the Tamil Siddhar Sivavakkiyar, drawn from Sivavakkiyam. The verses challenge the human tendency to search for God only in external places and rituals, while pointing towards the Divine Reality dwelling within oneself. This inward realization is a recurring theme in Sivavakkiyar’s teachings. Tamil Silo The song repeatedly invokes “Om Nama Sivaya”, the sacred Panchakshara mantra of Lord Shiva. Through references to the five syllables, the five elements, the body, consciousness and the inner light, Sivavakkiyar presents spiritual realization as something to be experienced directly rather than merely understood intellectually. His famous verse beginning “அஞ்செழுத்திலே பிறந்து” specifically connects the five-syllabled mantra with the five elements and the realization of Shiva within. Keyem Dharmalingam The opening verse, “ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை”, carries the central message beautifully: countless people spend their lives searching outside for the Divine Light that is already present within them. The verses therefore invite the devotee to turn inward, transcend superficial distinctions and recognize the eternal presence of Shiva within consciousness itself.