Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

1. சிவபுராணம்

Sivapuranam

எட்டாம் திருமுறை · Thiruvasagam

Manickavasagar இயற்றியவர் · Author Manickavasagar
Add to favourites
Share
Show QR code
Download PDF
Transliteration
Notes & Sources
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி! தேசன் அடிபோற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர்ஆர் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பான் யான். கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி, விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய் விளங்கு ஒளியாய், எண் இறந்து எல்லை இலாதானே! நின் பெருஞ்சீர், பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன். புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பு ஆகி, கல்லாய், மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய், வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய், செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்! மெய்யே! உன் பொன்னடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் ஐயா! என ஓங்கி, ஆழ்ந்து, அகன்று, நுண்ணியனே! வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா! பொய் ஆயின எல்லாம் போயகல, வந்து அருளி, மெய்ஞ்ஞானமாகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே! ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும், ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்! நாற்றத்தின் நேரியாய், சேயாய்! நணியானே! மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே! கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தாற் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த! மறைந்திருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை, அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலஞ் சோரும் ஒன்பது வாயில் குடிலை, மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் தன்மேல் வந்து அருளி, நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு, தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி! மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே! நேசம் அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங் கருணைப் பேர் ஆறே! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர் உயிராய் நின்றானே! இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! அன்பருக்கு அன்பனே! யாவையுமாய், அல்லையும் ஆம் சோதியனே! துன் இருளே தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம் நடுவு ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே! கூர்த்த மெஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே! காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே! ஆற்றின்ப வெள்ளமே! அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய், சொல்லாத நுண் உணர்வாய், மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன்! “எம் ஐயா”, “அரனே ஓ” என்று என்று போற்றிப் புகழ்ந்து இருந்து! பொய் கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அளிக்க வல்லானே! நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று! சொல்லற்கு அரியானைச் சொல்லித், திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்! சிவபுரத்தின் உள்ளார்! சிவன் அடிக் கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. – திருச்சிற்றம்பலம் –
namachchivaaya vaazhka! naathan thaal vaazhka! imaippozhuthum en nenjchil niingkaathaan thaal vaazhka! kookazhi aanta kurumani than thaal vaazhka! aakamam aakininru annippaan thaal vaazhka! eekan aneekan iraivan ati vaazhka! veekam ketuththu aanta veenthan ativelka! pirappu arukkum pinjnjakan than peykazhalkal velka! puraththaarkkuch cheeyoon than puungkazhalkal velka! karam kuvivaar ul makizhum koon kazhalkal velka! chiram kuvivaar oongkuvikkum chiiroon kazhal velka! iichan atipoorri! enthai atipoorri! theechan atipoorri! chivan cheevati poorri! neeyaththee ninra nimalan atipoorri! maayap pirappu arukkum mannan ati poorri! chiiraar perunthurai nam theevan atipoorri! aaraatha inpam arulum malai poorri! chivan avan en chinthaiyul ninra athanaal, avan arulaalee avan thaal vanangki, chinthai makizhach chivapuraanam thannai, munthai vinai muzhuvathum ooya uraippaan yaan. kan nuthalaan than karunaik kan kaatta, vanthu eythi, ennutharku ettaa ezhilaar kazhal irainjchi, vin nirainthu, man nirainthu, mikkaay vilangku oliyaay, en iranthu ellai ilaathaanee! nin perunjchiir, pollaa vinaiyeen pukazhumaaru onru ariyeen. pullaakip puutaayp puzhuvaay maramaakip, palvirukamaakip paravaiyaayp paampu aaki, kallaay, manitharaayp, peeyaayk kanangkalaay, val achurar aaki munivaraayth theevaraay, chellaaa ninra ith thaavara changkamaththul, ellaap pirappum piranthu ilaiththeen, emperumaan! meyyee! un ponnatikal kantu, inru viitu urreen; uyya, en ullaththul oongkaaramaay ninra meyyaa! vimalaa! vitaippaakaa! veethangkal aiyaa! ena oongki, aazhnthu, akanru, nunniyanee! veyyaay! thaniyaay! iyamaanan aam vimalaa! poy aayina ellaam pooyakala, vanthu aruli, meynjnjaanamaaki, milirkinra meych chutaree! enjnjaanam illaatheen inpap perumaanee! anjnjaanam thannai akalvikkum nal arivee! aakkam, alavu, iruthi, illaay! anaiththu ulakum, aakkuvaay, kaappaay, azhippaay, arul tharuvaay, pookkuvaay, ennaip pukuvippaay nin thozhumpil! naarraththin neeriyaay, cheeyaay! naniyaanee! maarram manam kazhiya ninra maraiyoonee! karantha paal, kannalotu, ney kalanthaar poolach chiranthu, atiyaar chinthanaiyul theen uuri ninru pirantha pirappu arukkum engkal perumaan! nirangkal oor ainthu utaiyaay! vinnoorkal eeththa! marainthirunthaay, emperumaan! valvinaiyeen thannai marainthita muutiya maaya irulai, aram paavam ennum arum kayirraal katti, puram thool poorththu engkum puzhu azhukku muuti, malanj choorum onpathu vaayil kutilai, malangkap pulan ainthum vanjchanaiyaich cheyya, vilangku manaththaal, vimalaa! unakkuk kalantha anpaakik kachinthu ul urukum nalam thaan ilaatha chiriyeerku nalki, nilam thanmeel vanthu aruli, niilkazhalkal kaatti, naayir kataiyaayk kitantha atiyeerku, thaayir chirantha thayaa aana thaththuvanee! maachu arra choothi! malarntha malarchchutaree! theechanee! theen aar amuthee! chivapuranee! paachamaam parru aruththup paarikkum aariyanee! neecham arulpurinthu, nenjchil vanjcham ketap peeraathu ninra perung karunaip peer aaree! aaraa amuthee! alavu ilaap pemmaanee! ooraathaar ullaththu olikkum oliyaanee! niiraay urukki, en aar uyiraay ninraanee! inpamum thunpamum illaanee! ullaanee! anparukku anpanee! yaavaiyumaay, allaiyum aam choothiyanee! thun irulee thoonraap perumaiyanee! aathiyanee! antham natuvu aaki, allaanee! iirththu ennai aatkonta enthai perumaanee! kuurththa menjnjaanaththaal kontu unarvaar tham karuththin nookku ariya nookkee! nunukku ariya nun unarvee! pookkum, varavum, punarvum ilaap punniyanee! kaakkum em kaavalanee! kaanpariya peeroliyee! aarrinpa vellamee! aththaa mikkaay ninra thoorrach chutar oliyaay, chollaatha nun unarvaay, maarramaam vaiyakaththin vevveeree vanthu arivu aam theerranee! theerrath thelivee! en chinthanaiyul uurraana unnaar amuthee! utaiyaanee! veerru vikaara vitakku utampin ul kitappa aarreen! “em aiyaa”, “aranee oo” enru enru poorrip pukazhnthu irunthu! poy kettu mey aanaar miittu ingku vanthu, vinaip piravi chaaraamee kallap pulakkurampaik kattu alikka vallaanee! nal irulil nattam payinru aatum naathanee! thillaiyul kuuththanee! thenpaanti naattaanee! allal piravi aruppaanee! oo! enru! chollarku ariyaanaich chollith, thiruvatikkiizh cholliya paattin porul unarnthu cholluvaar chelvar! chivapuraththin ullaar! chivan atik kiizhp palloorum eeththap paninthu. – thiruchchirrampalam –

Auto-generated transliteration — not yet manually reviewed.

Notes & Sources

Sivapuranam (சிவபுராணம்) is one of the most celebrated devotional compositions of Saint Manickavasagar and forms the opening hymn of the Thiruvasagam (திருவாசகம்), one of the great treasures of Tamil Saiva literature. Beginning with the immortal words “நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!”, Sivapuranam is an intense expression of surrender, devotion and spiritual awakening at the feet of Lord Shiva. In this hymn, Manickavasagar praises Shiva as the eternal reality that transcends beginning, end and limitation. He describes the soul wandering through countless forms of birth before finally receiving the grace of Shiva and discovering the path towards liberation. The famous passage beginning “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்…” portrays this long journey of the soul through different forms of existence. After experiencing innumerable births, the devotee finally declares: “மெய்யே! உன் பொன்னடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்” Having seen the sacred feet of Shiva, the wandering soul has finally reached its true home. Sivapuranam also explores profound Saiva philosophical ideas such as Pati (the Lord), Pasu (the individual soul), Pasam (bondage), Karma, Maya, divine grace and liberation. Yet Manickavasagar presents these ideas not merely as philosophy, but as a deeply personal experience of longing, surrender and divine love. Lord Shiva is described as the light beyond darkness, the subtle consciousness beyond ordinary perception, the source of creation, preservation and dissolution, and the compassionate Lord who enters the heart of the devotee and removes ignorance. The hymn culminates in praise of Shiva as the cosmic dancer of Thillai, Chidambaram, and declares that those who understand and recite these sacred verses with devotion shall attain the divine feet of Shiva. Sivapuranam therefore represents far more than a hymn of praise. It is a poetic journey of the human soul, from birth and bondage through divine grace towards realization and liberation. திருச்சிற்றம்பலம்